தாலிபான்களுக்கு ஏற்பட்ட சோகம்! கொண்டாட்டத்தின் இறுதியில் நிகழ்ந்த விபத்து.. பின்னர் நடந்தது என்ன?
தாலிபான்களின் வெற்றி கொண்டாட்டத்தின் இறுதியில் 2 போராளிகளுக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிலிருந்த அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் தாலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
நேற்று ஆப்கானிலிருந்த கடைசி ராணுவ வீரரும் ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனால் தாலிபான்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியை உலகத்திற்கு காட்டும் வகையில் சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காபூல் நகரில் வெற்றியை கொண்டாடும் விதமாக வரிசையாக கார்களில் சுமார் 313 தாலிபான் போராளிகள் பயணம் செய்தனர். சில போராளிகள் இராணுவ சீருடையில் மற்றும் சிலர் சாதாரண உடைகளை அணிந்திருந்தனர்.
அப்போது காரின் வேகம் திடீரென்று அதிகரித்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு தாலிபான் போராளிகள் வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் அவர்களது மகிழ்ச்சி தடைப்பட்டது. அவர்கள் வலியால் கத்தியதோடு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்.
இது குறித்து அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அதற்குப் பிறகு அனைவரும் காரில் அமர்ந்து மீண்டும் புறப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆபத்து நிறைந்த ஆயுதங்களை ஆப்கானில் விட்டு சென்றுள்ளதாகவும் அவை தாலிபான்களின் கையில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.