காபூலுக்குள் நுழைந்த தலீபான் போராளி துப்பாக்கியுடன் சாலையில் மண்டியிட்டு செய்த செயல்! வைரலாகும் வீடியோ
20 ஆண்டுகளுக்கு பின் காபூலக்குள் நுழைந்த தலீபான் போராளி கண்ணீர் விட்டு கலங்கிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலைநகர் காபூல் எல்லையில் தலீபான் போராளிகள் சூழந்துள்ள நிலையில் ஆப்கான் ஜனாதிபதி அரண்மனையில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கு மத்தியில், ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ராஜினாமா செய்த பிறகு ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய தலைவராக அலி அஹ்மத் ஜலாலி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூல் எல்லைக்குள் நுழைந்த தலீபான் போராளி ஒருவர், ஆயுதத்துடன் சாலையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க நிலத்தை முத்தமிட்டு கலங்கிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
#Taliban soldier kneels in tears thanking God as he enters #Kabul. pic.twitter.com/Cg8MIWo84c
— Sana Ayesha (@sanaayesha__) August 15, 2021
தலீபான் போராகளிகள் காபூல் நுழைவு வாயில்களில் சூழ்ந்துள்ள நிலையில், அவர்கள் தற்போதைக்கு நகருக்குள் நுழைய வேண்டாம் என தலீபான் தலைமை உத்தரவிட்டுள்ளது.