தாலிபான்கள் இவர்களைத் மட்டும் தேடி தேடி கொன்று வருகின்றனர்! வெளியான முக்கிய தகவல்: கடும் அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் முந்தைய ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் இன்னும் சிலரை தேடி தேடி வேட்டையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள் சில நாட்களிலே தங்களுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். நேற்றைய சுதந்திர தின நாளில் ஆப்கானிஸ்தான் கொடியுடன் சுற்றித் திரிந்த ஏராளமான மக்களை கொடுமையாக தாக்கினார்.
அதுமட்டுமின்றி விதிகளை மீறிய சிலரையும் சுட்டுக் கொன்றனர், அதில் புர்கா அணியாமல் பொதுவெளியில் சென்ற பெண்ணை துடி துடிக்க கொலை செய்தனர்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தாலிபான்கள் வீடு வீடாக தேடி தங்கள் எதிர்களை கொன்று குவித்து வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது ஆப்கானில் இருக்கும் தாலிபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியுடன் தொடர்புடைய, அதாவது Ashraf Ghani ஆட்சியில் இருந்த போது, அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய அரசு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளால வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்கள் போன்றோரை கொன்று வருவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் இராணுவத்தில் பணியாற்றிய மற்றும் காவல்துறையில் இருந்தவர்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான நோர்வே மையம் எச்சரித்துள்ளது.
இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஆட்சியில் தொடர்பில் இருந்தர்வளை வேட்டையாடுவதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அப்படி அவர்களை பிடிக்க முடியவில்லை, கொல்ல முடியவில்லை என்றால், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறி வைத்து கைது செய்து, ஷரியா சட்டத்தின் படி தண்டிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளில் மத்திய பதவியில் இருக்கும் நபர்கள் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.