திருந்தாத தாலிபான்கள்! ஆப்கானில் இளம் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு நேர்ந்த நிலை... வெளியான ஆதார புகைப்படங்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர்களை தாலிபான்கள் பணி இடைநீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக தாலிபானை சேர்ந்த நபர்களை அந்த பணியில் சேர்த்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்போம் என சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்கள். ஆனால் அவர்களின் தற்போதைய தொடர் செயல்கள் இன்னும் அவர்கள் மாறாமல் அப்படியே உள்ளனர் என்பதையே காட்டுவதாக உள்ளது.
அதன்படி காபூலில் உள்ள Tolo News செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த Khadija Amin என்ற இளம்பெண் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தாலிபான் செய்தி தொடர்பாளரை சமீபத்தில் பேட்டியும் எடுத்தார்.
இந்த நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு தாலிபானை சேர்ந்த ஆண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல வேறு சில பெண் பத்திரிக்கையாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Khadija Amin the new anchor on state TV last week.
— Farnaz Fassihi (@farnazfassihi) August 17, 2021
Taliban taking over her seat as of Monday.
Ms. Amin told us her boss informed her Taliban have banned women from returning to work at state television.#Afghanistan pic.twitter.com/S4BfISKkaG
Amin கூறுகையில், நான் ஒரு பத்திரிக்கையாளர், நான் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. நான் அடுத்து என்ன செய்வேன்? அடுத்த தலைமுறைக்கு எதுவும் இருக்காது, 20 வருடங்களாக நாம் சாதித்த அனைத்தும் போய்விடும்.
தாலிபான்கள் தாலிபான்கள் தான், அவர்கள் மாறவில்லை என தனது நிலையை வேதனையுடன் விளக்கியுள்ளார். இது தொடர்பான ஆதார புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
NIMA WORAZ: #Kabul Situation Discussed
— TOLOnews (@TOLOnews) August 17, 2021
In this program, host Beheshta Arghand interviews Mawlawi Abdulhaq Hemad, a close member of the Taliban’s media team, about Kabul’s situation and house-to-house searches in the city. https://t.co/P11zbvxGQC pic.twitter.com/Pk95F54xGr