துப்பாக்கிச் சூடு சத்தத்தில் குழந்தைகளுடன் தெறித்து ஓடும் மக்கள்! காபூலில் மோசமடையும் நிலைமை: பதபதைக்க வைக்கும் காட்சி
நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தைகளுடன் குவிந்த ஆப்கானியர்களை, தலிபான் மற்றும் வெளிநாட்டு படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை) முதல் காபூல் விமான நிலையத்தில் நீடித்து வரும் பதட்டமான சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும், நூற்றுக்கணக்கான மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற காபூலில் உள்ள Hamid Karzai சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில்களில் குவிந்து வருகின்றனர்.
பயணிக்க சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற குழந்தைகளுடன் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்களை கூட்டத்தை கலைக்க, தலிபான்கள் மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடும் சத்தத்தை கேட்ட மக்கள், குழந்தைகளுடன் தெறித்து ஓடியுள்ளனர்.
TALIBAN/FOREIGN FORCES THROUGH AERIAL FIRING, TRYING CONTROL THE INFLUX AT #Kabul AIRPORT IN ORDER TO DISPERSE THEM...
— Sumaira Khan (@sumrkhan1) August 20, 2021
MAJORITY OF PEOPLE ARE TRYING ENTER THE AIRPORT WITHOUT LEGITIMATE DOCUMENTS...IT SEEMS EVERYONE WANTS TO GO TO #USA...#Afghanistan #AfghanistanCrisis pic.twitter.com/qcxHwaiw07
பெரும்பாலானோர் சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் விமான நிலையத்திற்குள் நுழைய முயல்வதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.