காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி! தலிபான்கள் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரை ரத்தம் வரும் அளவிற்கு தலிபான்கள் தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு நாட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளனர்.
ஆனால், நாங்கள் மாறிவிட்டோம், ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், நிலைமை சரியானதும் பெண்கள் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
ஹெராட் மாகாணத்தை தொடர்ந்து நேற்று காபூலில் பெண்கள் தங்கள் உரிமைகளை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக இன்றும் தங்கள் உரிமைகளை கேட்டு காபூலில் பெண்கள் பேரணியாக சென்றனர்.
பேரணியாக சென்ற பெண்களை தலிபான்கள் தடுக்க முயன்ற போது வன்முறை வெடித்துள்ளது.
Look to the footage:
— Zaki Daryabi (@ZDaryabi) September 4, 2021
What is happening with #women marches in #Kabul.
It seems civilian and political protest are not allow any more.
Taliban trying to stop women march which happening second day in row. #Afghanistan pic.twitter.com/vqa8QONLOj
இதன்போது தாலிபன்கள் தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்ட Rabia Sadat என்ற பெண்ணிற்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் காபூலில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட தலிபான்கள் அனுமதிப்பதில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Rabia Sadat one of the today’s protestor in #Kabul beaten by Taliban.#Afghanistan. pic.twitter.com/1s3El4TZHW
— Zaki Daryabi (@ZDaryabi) September 4, 2021