தயவு செய்து கிளம்புங்கள்... ஆப்கான் மக்களுக்கு தலிபான் முக்கிய உத்தரவு!
காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான் முக்கிய உத்தரவிட்டுள்ளது.
தலிபான்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை) முதல் காபூல் விமான நிலையத்தில் நீடித்து வரும் பதட்டமான சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு உள்ளே அல்லது வெளியே, அவர்கள் துப்பாக்கியால் அல்லது நெரிசலில் கொல்லப்பட்டதாக தலிபான் மற்றும் நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், நூற்றுக்கணக்கான மக்கள் காபூலில் உள்ள Hamid Karzai சர்வதேச விமான நிலையம் வழியாக ஆப்கானை விட்டு வெளியேற தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இன்னும் கூட்டமாக இருக்கும் மக்களில், பயணிக்க சட்டப்பூர்வ உரிமை இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விமான நிலையத்தில் நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என என தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.