பெண்கள்.. குழந்தைகளை கடத்திச் சென்று தலிபான்கள் செய்யும் செயல்! வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்
தலிபான்கள் அட்டூழியம் குறித்து ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே பகீர் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணி படையை உருவாக்கி உள்ளார்.
கொல்லப்பட்ட தலிபான் எதிர்ப்பு தலைவர் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், தலிபான் எதிர்ப்புப் படையின் தளபதியாகக் கருதப்படுகிறார்.
பஞ்ஷர் பள்ளதாக்கு உள்ளிட்ட தலிபான்கள் கட்டுப்பாட்டில் வராத சில இடங்களை சரணடையும் படி தலிபான்கள் எச்சரித்தும் அதை தலிபான் எதிர்ப்பு படையினர் பொருட்படுத்தவில்லை.
தற்போது, பஞ்ஷர் பள்ளதாக்கை சுற்றி தலிபான்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், தாலிப்கள் உணவு மற்றும் எரிபொருளை Andarab பள்ளத்தாக்குக்குள் எடுத்தச் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு நிலைமை மிக மோசமடைந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் மலைகளுக்கு ஓடிவிட்டனர்.
Talibs aren't allowing food & fuel to get into Andarab valley. The humanitarian situation is dire. Thousands of women & children have fled to mountains. Since the last two days Talibs abduct children & elderly and use them as shields to move around or do house search.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 23, 2021
கடந்த இரண்டு நாட்களாக தலிப்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடத்திச் சென்று அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி இடம் விட்டு இடம் மாறியும், வீடு வீடாக சோதனை செய்தும் வருகின்றனர் என ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.