தாலிபான்களின் அடுத்த திட்டம் என்ன? சாலையில் ஆயுதங்களுடன் ஊர்வலம்.. பீதியில் மக்கள்
தாலிபான்கள் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு கையில் அயுதங்களுடன் சாலையில் ஊர்வலம் சென்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறிய சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நாடு முழுவதும் தாலிபான்கள் வசமுள்ளதால் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எங்களை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை, அனைவரும் பணிக்கு திரும்பலாம் என்று அறிவித்த தாலிபான்கள் சில நாட்களிலே அவர்களது உண்மையான சுயரூபத்தை காட்ட தொடங்கி விட்டனர்.
பொது இடத்தில் பர்தா அணியாத பெண்கள், பயங்கரவாதிகள் இனத்திற்கு எதிராக போராடுவார்கள் போன்றவர்களை குறி வைத்து ஈவு இரக்கமில்லாமல் சுட்டு தள்ளி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் இல்லை.. இனிமே ஷரியத் சட்டம் தான் என்று உறுதியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜாபுல் மாகாணத்தில் உள்ள குவாலத் நகரத்தில் தாலிபான்கள் வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு கையில் ஆயுதங்கள் ஏந்திய வண்ணம் அடையாள அணிவகுப்பு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாலிபான்கள் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது தாலிபான்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.