ஆப்கானிஸ்தானில் தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்ல தடை
தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடையை விதித்துள்ளார்.
தாலிபான் விதித்த தடை
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்களுக்காக அதிகமாக கட்டுப்பாட்டுகளை விதித்து வருகின்றார்கள். உயர்நிலை கல்வி, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செய்ய பெண்களுக்கு தடைவிதித்தது.
அந்தவகையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் இன்னுமொரு தடையை விதித்துள்ளது.
இதுகுறித்து தாலிபான் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
கூறும்போது, பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை.
பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |