காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளை தாலிபான்கள் தலைவர்களில் ஒருவனா? வெளிவரும் பகீர் பின்னணி
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் காபூல் விமான நிலையத்திற்கு தலிபான்களின் பாதுகாப்புத் தலைவராக அறிவிக்கப்பட்டவரே, இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் கோராசன் தீவிரவாத குழுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அல்கொய்தா பயங்கரவாதி கலீல் ஹக்கானி என்பவருக்கு தற்போது காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க நிர்வாகம் இவரது தலைக்கு 5 மில்லியன் டொலர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் தாலிபான்களுக்காக ஹக்கானி தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது புகைப்படங்களுடன் செய்தியாக வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
மேலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை எனவும், பாதுகாப்பு பலமாக இல்லை என்றால் நிம்மதியாக வாழ முடியாது என திரண்ட கூட்டத்தினரிடையே ஹக்கானி தெரிவித்திருந்தார்.
சஎவதேச நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஹக்கானி குழுவை நிறுவியவர் கலீல் ஹக்கானியின் சகோதரர் ஜலாலுதீன் ஹக்கானி. ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான போராளிகள் மத்தியில் 1980 காலகட்டத்தில் பெருந்தலைவராக கொண்டாடப்பட்டவர் ஜலாலுதீன் ஹக்கானி.
அமெரிக்கா அதன் நேச நாடான பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஹக்கானி குழு, ஆயுதம் மற்றும் பெருந்தொகையை ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு அள்ளி வழங்கியது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த 2001 வரையில் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார் ஜலாலுதீன் ஹக்கானி. தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பெயர்போன ஹக்கானி குழு, தற்போது காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் கோராசன் அமைப்பினருக்கு உதவியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த சந்தேகத்தை பிரித்தானிய உளவு அதிகாரிகள் தற்போது எழுப்பியுள்ளது, கலீல் ஹக்கானி காபூல் விமான நிலையத்தில் தலிபான்களின் பாதுகாப்புத் தலைவராக அறிவிக்கப்பட்டதன் பின்னரே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதால் என தெரிய வந்துள்ளது.