குழந்தைகள் விளையாடும் தீம் பார்க்கில் நுழைந்த தாலிபான்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா? வேடிக்கையை நீங்களே பாருங்கள்
உலகமே ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்துவரும் நிலையில், தாலிபான்கள் சிலர் குழந்தைகளைப் போல் விளையாடியுள்ள விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் அவர்கள் ஆட்சி அமைக்க உள்ளனர்.
இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.
?? #Afghanistan : d’autres images de la prise de contrôle du parc par les #talibans. (témoins) #Kabul #Kaboul pic.twitter.com/oqzb07KOLb
— Mediavenir (@Mediavenir) August 16, 2021
இது குறித்து வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானில் தாலிபான்கள் சிலர் காபூலில் உள்ள அம்யூஸ்மெண்ட் பார்க் ஒன்றில் உள்ள ரைடுகளை சிறுவர்கள் போல பயன்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள், ட்ராம்போலினில் குதித்து விளையாடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
#KabulAfter taking full control of Afghanistan, the Afghan Taliban arrived at the gym club Would you like to work out in the gym with these Afghan brothers ...?#Taliban pic.twitter.com/M7U8UzHi3i
— Global.News (@GlobalN69151479) August 15, 2021
இதனைத்தொடர்ந்து அதிபர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் அவர்கள் புகுந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அம்யூஸ்மெண்ட் பார்க்கில் அவர்கள் எப்படி சின்ன குழந்தைகள் போல விளையாடினார்களோ அதேபோல ஜிம்மில் உள்ள பொருட்களை பயன்படுத்த தெரியாமல் அவர்கள் பயன்படுத்துவது தெரிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து தலிபான்களை கிண்டல் செய்து வருகின்றனர்.
Taliban's terrorists right now: pic.twitter.com/2F8qHzw6No
— Asaad Hanna (@AsaadHannaa) August 16, 2021