CSK வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு
ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வெல்வதற்கு பாஜக உறுப்பினரான ஜடேஜா தான் முக்கிய காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கோப்பையை வென்ற CSK
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ஓட்டங்கள் குவித்து கோப்பையை வெல்வதற்கான இலக்கை நிர்ணயித்தது.
மழையின் குறுக்கீட்டால் இரண்டாவது இன்னிங்ஸ் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பை வெல்வதற்கு ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அப்போது சென்னை வீரர் ரவீந்தர் ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசி கொண்டு இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, CSK அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு பாஜக காரியகர்த்தா-வான ஜடேஜா தான் முக்கிய காரணம் என்று கருத்து தெரிவித்து இருப்பது தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், சென்னை அணியின் இறுதி வெற்றி ஓட்டங்களை அடித்தது பாஜக காரியகர்த்தா-வான ஜடேஜா, அவர் மனைவி(ரிவபா ஜடேஜா- ஜாம்நகர் வடக்கு தொகுதி) ஒரு பாஜக எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்-தை சேர்ந்தவர்.
கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 30, 2023
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்
- மாநில தலைவர்
திரு.@annamalai_k#CSK #Annamalai #9YearsOfSeva pic.twitter.com/zvy6B2eUlg
தமிழனாக பெருமைபடுகிறேன், ஆனால் CSK அணியை விட குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர், அதையும் கொண்டாடுகிறோம். குஜராத் அணியில் 96 ஓட்டங்கள் குவித்தது ஒரு தமிழர் அதையும் கொண்டாடுகிறோம், CSK அணியில் ஒரு தமிழர் கூட விளையாடவில்லை ஆனால் இருப்பினும் நாம் CSK-வை தோனிக்காக கொண்டாடுகிறோம்.
கடைசி வெற்றி ஓட்டங்களை அடித்து தமிழக அணியை வெற்றி பெற செய்தது பாஜக கார்யகர்த்தா என்று நாங்கள் பெருமைப்படுகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
?.?.?.?.?.?.?.?.?! ?
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Chennai Super Kings Captain MS Dhoni receives the #TATAIPL Trophy from BCCI President Roger Binny and BCCI Honorary Secretary @JayShah ?? #CSKvGT | #Final | @msdhoni pic.twitter.com/WP8f3a9mMc