திருமலையில் பகிரங்கமாக தொழுகை செய்த தமிழ்நாட்டு நபர்?.., பொலிஸார் விசாரணை
திருமலையில் நேற்று மதியம் திடீரென ஒரு நபர் பகிரங்கமாக தொழுகை செய்த நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழுகை செய்த நபர்
ஆந்திர மாநிலம் திருமலையில் வேற்று மத பிரச்சாரங்கள், தொழுகைகள், ஆர்ப்பாட்டங்கள், தர்னா, பொதுக்கூட்டங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், சோதனைச் சாவடியிலேயே அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திருமலையில் ‘கல்யாண வேதிகா’ என்னும் மண்டபத்தின் அருகே தொப்பி அணிந்த நபர் ஒருவர் வெளியூர் பக்தர்களிடம், 'நான் தொழுகை செய்ய வேண்டும், அதற்கான இடம் எங்குள்ளது?' என்று கேட்டுள்ளார்.
ஆனால் யாரும் அதற்கு பதில் கூறாததால் அவரே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தொழுகை செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் அந்த நபர் தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். இதனையறிந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த நபரை அழைத்துச் சென்று திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தடையை மீறி தொழுகை செய்தது ஏன் ? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |