விஷ பாம்பை புத்தாண்டு பரிசாக வழங்கிய இளைஞர்: ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மக்கள்
தமிழகத்தில் குடிபோதையில் விச பாம்பை புத்தாண்டு பரிசாக வழங்கிய இளைஞர் அந்த பாம்பு கடித்தே உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் இளைஞரின் அராஜகம்
தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே மணிகண்டன் என்ற இளைஞர் மது போதையில் விஷ பாம்பை பிடித்து விளையாடியுள்ளார்.
அத்துடன் அங்கிருந்தவர்களுக்கு புத்தாண்டு பரிசு தருவதாக கூறி அந்த பாம்பை காட்டி விளையாடியுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த மணிகண்டனை விஷ பாம்பு கடிக்கவே அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
பாம்பை அடித்து கொன்ற மக்கள்
பாம்பு கடித்து மதுபோதையில் இருந்த மணிகண்டன் சரிந்து விழவே, அவரை அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு கவரில் வைக்கப்பட்டு இருந்த பாம்பை பார்வையிட்ட நபரையும் அது கடித்தது, இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த கண்ணாடி விரியன் பாம்பை அடித்து கொன்றுள்ளனர்.