கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி உலக சாதனை படைத்த 10 வயது தமிழ் வம்சாவளி சிறுமி
10 வயது தமிழ் வம்சாவளி சிறுமி, கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
10 வயதில் சாதனை
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில், 2025 செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், 60 வயதான கிராண்ட் மாஸ்டர் Peter Wells என்பவரை, 10 வயதான போதனா சிவானந்தன்(bodhana sivanandan) என்ற சிறுமி இறுதி சுற்றில் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம், இள வயதில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தியவர் என்ற பெருமையை போதனா சிவானந்தன் பெற்றுள்ளார்.
🇬🇧♟👏 British sensation Bodhana Sivanandan has made history by becoming the youngest female chess player ever to beat a grandmaster!
— International Chess Federation (@FIDE_chess) August 11, 2025
The 10-year-old, from Harrow, pulled off the win on Sunday against 60-year-old Grandmaster Peter Wells in the last round of the 2025 British… pic.twitter.com/bAMqeyFZHm
முன்னதாக, அமெரிக்காவை சேர்ந்த 10 வயதான Carissa Yip, 2019 ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்திருந்தார்.
போதனா சிவானந்தன்
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்து வரும் போதனா சிவானந்தனின் பெற்றோர், தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஐடி துறையில் பணியாற்றி வரும் அவரது தந்தை சிவானந்தன் வேலாயுதம், கடந்த 2007 ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
லண்டனிலே பிறந்து வளர்ந்த போதனா சிவானந்தன், கொரோனா காலத்தில் தனது 5 வயதிலே செஸ் விளையாட தொடங்கியுள்ளார்.
போதனா சிவானந்தன் ஏற்கனவே 3 உலக ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு, 10 வயதுக்கு உடபட்டோருக்கான செஸ் தரவரிசையில், உலகளவில் போதனா சிவானந்தன் முதலிடத்தில் இருந்தார்.
கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பெண்கள் அணியில் சேர்க்கப்பட்ட போதனா சிவானந்தன், சர்வதேச அளவில் பிரித்தானியாவிற்காக விளையாட உள்ள இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
We caught up with Bodhana Sivanandan — youngest person ever selected for a national team in any sport in England 🇬🇧
— International Chess Federation (@FIDE_chess) June 16, 2025
Who are her favorite Brits? Let’s find out! 👑#FIDERapidBlitzTeams pic.twitter.com/Sover2UDlX
முன்னதாக, லான் வியான் 23 வயதில் அணியில் இருந்ததே சாதனையாக இருந்தது.
போதனா சிவானந்தன், பிரித்தானியாவின் சிறந்த செஸ் வீரராக வருவார் என பலரும் கணிப்பு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |