நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று 1000 பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்த தமிழர்! யார் இவர்?
கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த ஒருவர் இன்று அமெரிக்காவில் சொந்த நிறுவனம் தொடங்கி பல கோடிகளை சம்பாதித்து வருகின்றார்.
இன்று அமெரிக்காவை கலக்கி வரும் Sidd Ahmed என்பவர் இந்தியாவின் திருச்சி பகுதியில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். இவர் படித்து முடித்த பிறகு வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
பல கஷ்டங்களிலும் விடா முயற்சியை கைவிடாமல் அமெரிக்காவில் VDart என்கின்ற நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு விவசாய தம்பதிக்கு 6வது குழந்தையாக பிறந்து இன்று அமெரிக்கா உட்பட உலகளவில்10 கிளைகளை விரிவாக்கியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் ஆண்டுதோறும் சுமார் 1800 கோடி வரை சம்பாதித்து வருகின்றனர். Ahmed தனது அசுரர வளர்ச்சி குறித்து கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.
ஆனால் நான் படித்து கொண்டிருக்கும் போதே எனது அப்பா தவறிவிட்டார். அதன் பிறகு குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட நான் சரியாக படிக்க முடியாமல் போனது. 4 வருடத்தில் முடிக்க வேண்டிய டிகிரியை 7 ஆண்டுகள் தொடர்ந்து படித்தேன்.
அதன் பிறகு அமெரிக்கா சென்ற நான் ஒரு வேலை சாப்பிட்டிற்கு கூட கஷ்டப்பட்டேன். எனது விடா முயற்சி, கோவம் போன்றவையில் தான் நான் இங்கு இருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு பணி செய்தேன். அதன் பிறகு நானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் பெருமாளும் இந்தியர்களை பணி அமர்த்த தொடங்கினேன்.
இன்றுவரை எங்கள் நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தியர்களே வேலை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் பிரபல கோடீஸ்வரராக உருமாறி தமிழகத்துக்கு பெருமையை சேர்த்துள்ளார்.