இலங்கை மக்களுக்கு உதவ தனி தீர்மானம்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார்... முழு தகவல்
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் உயிர் காக்கும் மருந்துகளையும் அனுப்ப தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
இதற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டுமென ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இதுவரை மத்திய அரசிடமிருந்து எவ்வித தெளிவான பதிலும் கிடைக்காத நிலை உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் #lka | #Tamilnadu | #SrilankanTamils pic.twitter.com/HeBRugGE5B pic.twitter.com/dJQFRon0v5
— DON Updates (@DonUpdates_in) April 29, 2022
இந்நிலையில் இன்று இலங்கை மக்களுக்கு உதவுவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.
அதில், இலங்கை பொருளாதார பிரச்சனை குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்டாலின் பேசுகையில், இலங்கைக்கு அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் உயிர் காக்கும் மருந்துகளையும் அனுப்ப தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். pic.twitter.com/kja9dTmx5C
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 29, 2022