இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் - 50 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்க உள்ள தமிழக அரசு
50 அத்தியாவசிய சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அரசு சேவைகள்
தமிழக அரசு மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் அத்தியாவசிய சேவைகளை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.
இதன் மூலம், ரேஷன் கார்டு பெயர் சேர்ப்பது நீக்குவது, மின்சார கட்டணம், வரி செலுத்துவது, குடிநீர் கட்டணம் செலுத்துவது, மெட்ரோ மற்றும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்வது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது, வருமான வரி சான்றிதழ் பெறுவது போன்ற 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சேவைகளை எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்ளும் வகையில் சாட்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மெட்டாவை சேர்ந்த ரவி கார்க் ஆகியோர் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |