வீட்டை காலி பண்ணச் சொன்னவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பான சம்பவம்
காரைக்குடியில் வீடு காலி பண்ண கூறியதால் வீட்டின் உரிமையாளரை அரிவாளால் விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே. நகரில் வசித்து வருபவர் சரவணன் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவர் செல்லப்பன் நகரில் கட்டிய சொந்த வீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு (வயது 39) என்பவருக்கு ஒத்திக்கு விட்டுள்ளார்.
ஒத்தி முடிந்து விட்டதால் சரவணன் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். செல்வகுமார் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சரவணன் செல்வ குமாரிடம் வீட்டை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் தனது அத்தை லாதாவுடன் இருசக்கர வாகனத்தில் கே.கே நகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த வீச்சருவாள் மூலம் பாய்ந்து வெட்ட முயல அதிர்ஷ்டவசமாக சரவணன் தப்பித்து ஒடுகிறார்.
மாடியில் இருந்த சரவணன் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு காப்பாற்ற கிடைத்த பொருள்களால் செல்வகுமாரை தாக்க சண்டை நடக்கிறது.
இந்த சம்பவத்தில் காயம்பட்ட சரவணன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வீச்சருவாள் மூலம் வெட்டி விட்டு தப்பிய செல்வகுமார் அத்தை லதா ஆகிய இருவரையும் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.