இன்பச்சுற்றுலா! பள்ளி மாணவன் ஓட்டிச் சொன்ற கார் விபத்து- நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்
தமிழகத்தில் வாணியம்பாடி அருகே நடந்த கார் விபத்தில் 19 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்
வாணியம்பாடி அருகில் உள்ள ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த 10 வகுப்பு பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் 12 வகுப்பு மாணவர் ஒருவர் என 5 பேர் விடுமுறையை முன்னிட்டு இன்று காலை ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
மலைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிய பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 12 வகுப்பு மாணவன் அதனான்(19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தக்வீம்(16), தல்ஹா(16), ராஷித்(16), ஈஹான்(16) ஆகிய நான்கு 10 வகுப்பு மாணவர்களும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு வாகனம் நல்ல ஓட்ட தெரிந்து இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |