TN Weather: தமிழகத்தின் வெப்பநிலை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2°C வரை படிப்படியாக உயரக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை 3°- 5°C இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42°C வரையும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39°C வரையும் இருக்கக்கூடும்.
ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37°C ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |