ட்ரம்பின் வரி விதிப்பால் பாதிப்பு அமெரிக்க மக்களுக்கு... சீனா வெளிப்படை
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகத்தைக் கையாள்வதற்கான அதன் உத்தியை சீனா மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது.
கேள்வி கேட்க
நேரிடையாக ட்ரம்ப் நிர்வாகத்தை இலக்கு வைப்பதற்கு பதிலாக அமெரிக்க மக்களுக்கு ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து விளக்கமளிக்க முன்வந்துள்ளது.
Foreign countries pay the tariffs? No—US businesses pay, then pass costs to you.
— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) April 12, 2025
Tariffs don’t bring manufacturing back. They’re just a tax on Americans. pic.twitter.com/iOw3IrFpiQ
அமெரிக்க குடிமக்கள் மீதான சீனாவின் சமீபத்திய தகவல் தொடர்பு தாக்குதல், ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் உள்நாட்டு விளைவுகள் இல்லாமல் வெளிநாட்டு பொருளாதாரங்களை குறிவைக்கின்றன என்ற அமெரிக்கர்களிடையே பிரபலமான கருத்தை கேள்வி கேட்க வைத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அமெரிக்க இறக்குமதியாளராகக் கருதப்படும் ஒருவரது காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த நபர் அமெரிக்க பொதுமக்களிடம், குறிப்பாக ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் பேசுகிறார்,
ட்ரம்பின் வரியை
ட்ரம்பின் அதிரடியான வர்த்தகக் கொள்கைகளின் விலையை வெளிநாடுகள் அல்ல, சாதாரண குடிமக்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார், இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகளை உயர்த்தி நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வெளிநாடுகள் அல்ல, அமெரிக்க வர்த்தகர்களே ட்ரம்பின் வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அதன் சுமையை பொதுமக்கள் மீது அவர்கள் திணிப்பார்கள் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ட்ரம்ப் சீன இறக்குமதி மீது 145 சதவீத வரி விதிக்க, சீனாவோ அமெரிக்க இறக்குமதி மீது 125 சதவீத வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |