சீனா மீது நடவடிக்கை இருக்காது... ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் இரட்டை நிலை
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா மீது வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உறவை பாதிக்கும்
ரஷ்ய எண்ணெய் விவகாரம் என்பது சீனா உடனான அமெரிக்காவின் உறவை பாதிக்கும் என்றே ஜேடி வான்ஸ் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது வரி விதித்துள்ள நிலையில், சீனா தொடர்பில் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான அமெரிக்காவின் உறவு, ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லாத பல விடயங்களைப் பாதிக்கும் என்பதால், சீனா பிரச்சினை சற்று சிக்கலானது என்றார்.
அமெரிக்கா ஆரம்பத்தில் இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரிகளை விதித்திருந்தது, மேலும் கடந்த வாரம் ரஷ்ய எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் இந்தியா மீது மேலும் 25 சதவீத வரிகளை ட்ரம்ப் விதித்தார்.
மிக உயர்ந்த வரிகளில்
இதனால் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் அமெரிக்கா விதித்த மிக உயர்ந்த வரிகளில் ஒன்றாக இது மாறியது. ரஷ்யா விவகாரத்தில் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியானது எதிர்வரும் 27ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வை இந்தியா கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும், இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்கா தெரிவு செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |