டர்போ இன்ஜின் + ஸ்போர்ட்டி லுக்! வெறும் 9 லட்சத்தில் கிடைக்கும் Tata Altroz Racer
டாடா நிறுவனம் ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான அல்ட்ரோஸ் ரேசர் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட வாகனங்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது.
தற்போது, அவர்களின் பிரபலமான அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி பதிப்பான அல்ட்ரோஸ் ரேசர் காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் திறமையான செயல்திறன்ஆகியவற்றை வழங்குகிறது.
மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த காரின் விலை ₹9 லட்சம் முதல் ₹11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ரோஸ் ரேசர், ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான ஹேட்ச்பேக்கை தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |