குறைந்த விலையில் Tata-வின் புதிய Tiago EV facelift கார் அறிமுகம்
Tata Motors, 2026 Tiago EV facelift மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வடிவமைப்பு, மேம்பட்ட உள்துறை வசதிகள் மற்றும் குறைந்த விலை ஆகியவை இந்த மாடலின் முக்கிய அம்சங்களாகும்.
புதிய Tiago EV-க்கு இரண்டு LFP battery options வழங்கப்பட்டுள்ளன. 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரிகளுடன், 30 kW DC fast charging வசதி உள்ளது.
முக்கியமாக, 24 kWh மாடலுக்கு Lifetime Unlimited Kilometre Battery Warranty வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு புதிய Tiago EV ரூ.6.99 முதல் ரூ.9.99 லட்சம் விலையில் கிடைக்கிறது. Battery-as-a-Service திட்டத்தின் கீழ், ஆரம்ப விலை ரூ.4.69 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் MG Comet EV மற்றும் Citroen eC3 போன்ற போட்டியாளர்களை விட Tiago EV இந்தியாவின் மிகக் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை கொண்டுள்ளது.
வடிவமைப்பில், புதிய LED headlamps, DRLs, alloy wheels மற்றும் connected tail lamps சேர்க்கப்பட்டுள்ளன.
உட்புற அம்சங்களில், 10.25-inch infotainment touchscreen, wireless Android Auto/Apple CarPlay, digital driver’s display, rear AC vents, twin wireless chargers போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |