மகளின் சம்பாத்தியத்தில் வாழ்வதாக கேலி... டென்னிஸ் நட்சத்திரத்தின் தந்தை செய்த கொடிஞ்செயல்
மகளின் சம்பாத்தியத்தில் வாழ்வதாக கேலி செய்யப்பட்ட தந்தை ஒருவர் செய்த கொடுஞ்செயல் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு
குருகிராமில் உள்ள வீட்டில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
49 வயதான தீபக் யாதவ் தமது மகள் மீது 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 3 குண்டுகள் பாய்ந்து 25 வயதான ராதிகா யாதவ் பலியாகியுள்ளார். சம்பவத்தின் போது ராதிகா சமையலறையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஒரு போட்டியின் போது தோள்பட்டை காயம் ஏற்பட்டதால், டென்னிஸ் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான ராதிகா சிறார்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு டென்னிஸ் அகாடமியைத் திறந்தார்.
இருப்பினும், அவரது தந்தை தனது மகளின் சம்பாத்தியத்தில் வாழ்வதற்காக மக்கள் அவரை கேலி செய்ததால், டென்னிஸ் அகாடமியை மூட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தனது மகள் தனது அகாடமியை மூட மறுத்ததால் தீபக் யாதவ் அடிக்கடி கோபப்பட்டுள்ளார்.
டென்னிஸ் அகாடமி
கடந்த சில நாட்களாக கிண்டல்களுக்கு இலக்காவது அதிகரிக்கவே, அவர் ராதிகாவிடம் டென்னிஸ் அகாடமியை மூடச் சொன்னார், ராதிகா அதற்கு மறுத்துள்ளார். மட்டுமின்றி, சிலர் ராதிகாவின் நடத்தை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சூழ்நிலை என் கௌரவத்தைப் புண்படுத்தியதால் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டேன், மன அழுத்தத்தில் இருந்தேன்.
இந்தப் பதற்றம் காரணமாக உரிமம் பெற்ற ரிவால்வரால், ராதிகா சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பின்னால் இருந்து மூன்று முறை சுட்டு, கொலை செய்ததாக தீபக் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |