இசை நிகழ்சிகளை நடத்தியே பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த பிரபல பாடகி
பிரபல Pop பாடகியான Taylor Swift உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்குடன் இணைந்துள்ளார்.
யார் இந்த Taylor Swift?
அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான பாடகி தான் Taylor Swift.
பாடலாசிரியராகவும், பாடகியாகவும் பிரபலமான இவர் Pop பாடல்களை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார்.
பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருகின்றார். இவர் கிராமி விருதையும் தனக்காக பெற்றுள்ளார்.
இவர் பல நாடுகளில் தனது இநை நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து உலகமுழுவதும் கொரானோ தாக்கம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து அவை அனைத்தையும் ஒத்திவைத்தார்.
பின் அண்மையில் தொடங்கி 5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசைநிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தினார்.
இவரது இசை நிகழ்ச்சியின் காரணமாக கொரோனாவுக்கு பின் முடங்கிய பொருளாதாரம் மீண்டும் எழுச்சியடைந்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கடந்த வருடங்களில் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இவர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த பாடகி
முதல் 10 பணக்காரர்கள் என்று வரும்போது, பட்டியலிடப்பட்ட எட்டு பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அதில் ஆறு பேர் தொழில்நுட்பத் துறையில் சாதித்தவர்கள்.
முதலாவது இடத்தில் Arnault மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான மஸ்க் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து Amazon உரிமையாளர் Jeff Bezos மூன்றாவது இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்கின் நிகர மதிப்பானது கடந்த ஆண்டை விட 8% உயர்ந்துள்ளது.
இந்த பட்டியலில் பிரபல பாடகியான Taylor Swift உம் இடம் பிடித்துள்ளார்.
உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முதன்முறையாக $1.1bn டொலர்களுடன் இவர் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இந்த இடத்தை பாடல் எழுதுதல் மற்றும் நிகழ்ச்சிகள் செய்வதன் மூலம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |