பள்ளி மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்: 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பள்ளி மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவிலிருக்கும் லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்க பள்ளியின் ஆசிரியை ஜாக்குலின் மா (வயது 36). அதே பள்ளியில் படித்து வந்த 12 வயது சிறுவனுடன் சுமார் 10 மாதங்கள் தகாத உறவில் இருந்தது அம்பலமாகியுள்ளது.
ஆசிரியை ஜாக்குலின் மா, அந்த இளம் மாணவனுக்கு தொடர்ந்து காதல் கடிதங்களை அனுப்பி வந்துள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்ததுடன், குறுஞ்செய்திகள் மூலமாகவும் நெருக்கமான தொடர்பை அவர்கள் பேணி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் சிறுவனின் தாயாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அம்பலமான உண்மை
சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஜாக்குலின் மா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஜாக்குலின் மா, அந்த ஒரு மாணவன் மட்டுமல்லாமல், மேலும் சில பள்ளி மாணவர்களுடனும் தகாத ரீதியாகத் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிரியை ஜாக்குலின், அந்த மாணவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள், உணவு மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்ததோடு, அவர்களின் வீட்டுப்பாடங்களைக்கூட தானே செய்து கொடுத்து, அவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளார்.
இந்த துஷ்பிரயோக வழக்கு சான் டியாகோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜாக்குலின் மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு கடுமையான தண்டனையாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |