மகப்பேறு விடுப்பின் போது தொடங்கப்பட்ட நிறுவனம்... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 61,000 கோடி
முன்னாள் ஆசிரியர் ஒருவர் தமது மகப்பேறு விடுப்பின் போது வெறும் ரூ 32,000 முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் இன்று நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவின் அமேசான்
ரஷ்யாவின் Tatyana Bakalchuk என்பவர் ஆசிரியராக பணியாற்றியவர். ரஷ்யாவின் அமேசான் என கொண்டாடப்படும் மிகப்பெரிய ஒன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான Wildberries-ன் நிறுவனர்.
ப்ளூம்பெர்க் பெரும் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, இவரது மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ 61,000 கோடி.
இவரது Wildberries நிறுவனமானது ஆயத்த ஆடை, மின்னணு பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் பிரிவுகளில் 60,000க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விற்பனை செய்கிறது.
2004ல் மிகவும் எளிமையாகத் தொடங்கப்பட்டது தான் Wildberries நிறுவனம். முன்னாள் ஆங்கில ஆசிரியையான இவர், தனது வளர்ந்து வரும் குடும்பத்திற்கு தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு வெறும் ரூ 32,000 முதலீட்டுடன் தனது மகப்பேறு விடுப்பின் போது இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தமது கணவர் மற்றும் அவாது நண்பர் ஒருவரையும் பங்காளிகளாகக் கொண்டு தங்களின் குடியிருப்பிலேயே தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக ஜேர்மன் சில்லறை விற்பனை நிறுவனமான ஓட்டோ உடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். மட்டுமின்றி, தாமே துணிந்து அனைத்து வேலைகளையும் முன்னெடுத்தார்.
தற்போது Wildberries நிறுவனத்தில் 48,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர். ஆண்டு வருவாய் என்பது 27.5 பில்லியன் டொலர் என்றே கூறபப்டுகிறது. இது ரஷ்யாவின் மொத்த சில்லறை வர்த்தகத்தில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.
Wildberries நிறுவனத்தில் 99 சதவிகித பங்குகளை தமது வசம் வைத்துக் கொண்டுள்ளார் Tatyana. எஞ்சிய 1 சதவிகிதம் அவரது கணவர் வசம் உள்ளது. ரஷ்யா தவிர Wildberries நிறுவனம் ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்சில் வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது.
தற்போதும் வாடகை வீட்டில்
ஆண்டுக்கு பல கோடிகள் சம்பாதித்தாலும், Tatyana குடும்பம் தற்போதும் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு தராத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
2008ல் நிதி நெருக்கடியின் போது, ரூ 9 லட்சம் மதிப்புள்ள விற்கப்படாத அடிடாஸ் சரக்குகளை கடனாக வாங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை விற்று முடித்து பெரும் லாபம் ஈட்டினார்.
2020ல், கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றிவரும் சூழலில், உரிய நேரத்தில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக அவர் 12,000 கூடுதல் தொழிலாளர்களை நியமித்தார்.
அதன் மூலம் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை அவர் ஊக்குவித்தார். இந்த இரு சம்பவங்களும் இக்கட்டான நேரத்தில் சவால்களை எதிர்கொள்ளும் அவரது துணிச்சலை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |