கன்னி மேரி சிலையின் கண்களில் வடியும் இரத்தக்கண்ணீர்: பரபரப்பை உருவாக்கியுள்ள விடயம்
மெக்சிகோ நாட்டில் தேவாலயம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கன்னி மேரி சிலையின் கண்களில் இரத்தக்கண்ணீர் வடியும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கன்னி மேரி சிலையின் கண்களில் இரத்தக்கண்ணீர்

Image: Newsflash
மெக்சிகோவிலுள்ள Obrera என்னுமிடத்தில் ஒரு தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கன்னி மேரி சிலையின் கண்களில் இரத்தக்கண்ணீர் வடிவதைக் கவனித்த, அந்த தேவாலயத்தை பொறுப்பு வகிப்போர், அதிர்ச்சியடைந்து, உடனடியாக திருச்சபை தலைவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

Image: Newsflash
இந்த செய்தி பரவுவதால், அந்த தேவாலயத்தைக் கவனித்துக்கொள்ளும் குடும்பத்துக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும், அது எந்த தேவாலயம் என்ற விடயம் வெளியே சொல்லப்படவில்லை.
இது கடவுளிடமிருந்து வரும் செய்தி என அந்த திருச்சபை சார்ந்தவர்கள் நம்பும் நிலையில், உடனடியாக எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என திருச்சபையின் தலைவர்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஆகவே, திருச்சபையின் தலைவர்கள் அந்த சிலையை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளார்கள். ஆய்வில் தெரியவரும் விடயங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image: Newsflash
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |