இந்த நாட்டில் iPhone-களுக்கு தடை., ஏன் தெரியுமா?
தென் கொரியா நாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ புதிய ஸ்மார்ட் போன்களுக்கு மத்தியில் iPhone மோகம் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
எந்த புதிய மாடல் சந்தைக்கு வந்தாலும் லட்சக்கணக்கில் விலை போனாலும் ஐபோன்கள் அமோகமாக விற்பனையாகின்றன.
ஆனால் தென்கொரியா இந்த ஐபோன்களுக்கு தடை விதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ கட்டிடங்களில் ஐபோன்களை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது.
ஆனால் அவர்கள் Samsung Android சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
குரல் பதிவுகளைப் பதிவுசெய்து பகிரக்கூடிய மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த முடியாத, குறிப்பாக அனைத்து iPhone சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
ஜூன் முதலாம் திகதிக்குப் பிறகு ராணுவ அதிகாரிகளோ ஊழியர்களோ ராணுவ கட்டிடத்திற்குள் ஐபோன்களை எடுத்துச் செல்ல முடியாது.
நாடு எடுத்த இந்த முடிவால் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு மொபைல் பாதுகாப்பு செயலி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
South Korea bans iPhones for military males, Samsung Android phones, South Korea bans iPhones