14 பேரின் உயிரை பறித்த விபத்து: முக்கிய நபர் கூறிய அந்த வார்த்தையால் பரபரப்பு
இத்தாலியில் சிறார்கள் உட்பட 14 பேர்கள் பலியான கேபிள் கார் விபத்து தொடர்பில், மொத்தமும் தமது தவறு தான் என அதன் தொழில்நுட்பவியலாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கேபிள் கார் போக்குவரத்தை முன்னெடுத்து நடத்தும் நிறுவனத்தின் மூன்று அதிகாரிகள் கடுமையான சிறைத் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
இவர்கள் மூவரும் அவசரகால பிரேக்கிங் அமைப்பை வேண்டுமென்றே செயலிழக்க செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மணிக்கு 160 கி.மீற்றர் வேகத்தில் சென்றிருந்த அந்த கேபிள் காரானது கட்டுப்பாட்டை இழந்து அறுந்து விழுந்துள்ளது. ஞாயிறன்று நடந்த இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட பல தம்பதிகள் பலியாகினர்.
இந்த விவகாரத்தில் மூன்று அதிகாரிகளை பொலிசார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த மூவருமே விபத்திற்கு முதன்மை காரணம் என இதுவரையான விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் Gabriele Tadini என்பவர் திட்டமிட்டே தாங்கள் அவசர பிரேக்கிங் அமைப்பை செயலிழக்க செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த விபத்திற்கு முழு பொறுப்பும் தாம் மட்டுமே என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மூவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.