கரடிகளுக்கு இரையான இளம்பெண்: மகளின் கதறலை மொபைலில் கேட்டு தவித்த தாய்
ஜப்பான் நாட்டில் கரடிகளின் தொல்லை அதிகமாகிவிட்டதால், அவற்றை ஒழித்துக்கட்ட ராணுவத்தை அந்நாடு களமிறக்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஜப்பானின் Honshu தீவில், குறைந்தது 73 பேர் கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், ரஷ்யாவில் கரடியால் கொல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் குறித்த அதிரவைக்கும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.
கரடிகளுக்கு இரையான இளம்பெண்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஓல்கா (Olga Moskalyova, 19) என்னும் இளம்பெண் தனது வளர்ப்புத் தந்தையான இகோருடன் (Igor Tsyganenkov) வாக்கிங் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

ஓல்கா தனது தாயான டாற்றியானாவுடன் (Tatiana) மொபைலில் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருக்க, திடீரென ஒரு கூட்டம் கரடிகள் ஓல்காவையும் இகோரையும் சுற்றி வளைத்துள்ளன.

கரடிகள் இகோரையும் ஓல்காவையும் தாக்கத் துவங்க, அம்மா, காப்பாற்றுங்கள், கரடிகள் எங்களைத் தாக்குகின்றன என சத்தமிட்டுள்ளார் ஓல்கா.

மறுபக்கம் மகள் கதறுவதை மொபைலில் கேட்டுக்கொண்டிருந்த டாற்றியானா, ஒன்றும் செய்ய இயலாமல் தவித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் தாயிடம், அம்மா, இப்போது எனக்கு வலி ஒன்றும் தெரியவே இல்லை, என்னை மன்னித்துவிடுங்கள், ஐ லவ் யூ என்று கூறிவிட்டு உயிரிழந்துள்ளார் ஓல்கா.
டாற்றியானா பொலிசாருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் ஓல்காவும் இகோரும் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க 90 நிமிடங்கள் ஆகியுள்ளன.
ஆறு வேட்டைக்காரர்களுடன் பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், கரடிகள் ஓல்காவின் உடலை தின்றுகொண்டிருப்பதைக் கண்டுள்ளார்கள் அவர்கள்.
2011ஆம் ஆண்டு, ஓல்கா மற்றும் இகோர் ஆகிய இருவரின் உடல்களும், ஒரே நாளில், அருகருகே புதைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானைப்போலவே, ரஷ்யாவிலும் கரடிகள் மனிதர்களைத் தாக்குவது அதிகரித்துவருவதாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |