17 வயது சிறுவனை மது அருந்த அழைத்த நண்பர்கள்..பின்னர் நடந்த கொடூரம்
இந்தியாவின் டெல்லி நகரில் 17 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுவன் மரணம்
தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள பூங்காவில் 17 வயது சிறுவன் ஒருவரது இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது குறித்த சிறுவன் விவேக் (17) என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அதிர்ச்சிகர உண்மை வெளியானது. விவேக் மீது நண்பர்கள் சிலர் வெறுப்பில் இருந்துள்ளனர்.
iStock
கொடூரமாக தாக்கி கொலை
இதனால் அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி விவேக்கை நண்பர் ஒருவர் மது அருந்த சத்புலா பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே 5 பேர் காத்திருந்தனர். அவர்கள் விவேக் உள்ளே நுழைந்தவுடன் இரண்டு கத்திகள் மற்றும் செங்கற்களையும் கொண்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் விவேக் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தப்பியோடிய விவேக்கின் நண்பர்களில் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
image source: Dailythanthi
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |