எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்கள்: காப்பாற்ற மறுத்த ஐரோப்பிய நாடொன்று
பல்கேரிய - துருக்கி எல்லையில் கடும் குளிரில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த மூன்று இளைஞர்களைக் காப்பாற்ற பல்கேரிய அதிகாரிகள் மறுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குளிரில் தவித்து
எகிப்து நாட்டவர்களான அந்த மூன்று இளைஞர்கள் தொடர்பில் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், பல்கேரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து புகைப்படங்கள், சாட்சியங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பகுதி என அனைத்து ஆதாரங்களையும் இரண்டு மனிதாபிமான குழுக்கள் சேகரித்துள்ளது.
குறித்த தரவுகளில் இருந்தே பல்கேரிய அதிகாரிகள் மெத்தனம் அம்பலமாகியுள்ளது. தென்கிழக்கு பல்கேரியாவில் உள்ள பர்காஸ் காடுகளில் தொலைந்து போன நிலையில் மூன்று இளைஞருகளும் குளிரில் தவித்து உதவிக்கு அழைத்துள்ளனர்.
இது ஐரோப்பிய எல்லைகளில் புலம்பெயர் மக்களுக்கு எதிராக அந்த நாடுகள் முன்னெடுக்கும் கொடூர நடவடிக்கைகளை வெளிச்சமிட்டு காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஐரோப்பாவில் தஞ்சம் கோர விரும்பும் மக்கள் பல்கேரியாவின் துருக்கியுடனான எல்லையை அடிக்கடி கடக்கும் இடமாகும், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் இப்பகுதி தடைசெய்யப்பட்ட நிலப்பரப்பு என்பதுடன், பாறைகள் மற்றும் மலைப்பாங்கானது, உறைபனி குளிர்கால வெப்பநிலை மற்றும் கடுமையான காற்றுடன் இப்பகுதி மக்கள் நடமாற்றத்திற்கு உகந்தது அல்ல என்றே கூறுகின்றனர்.
மீட்பு முயற்சிகளை
இந்த நிலையில் NNK மற்றும் CRB ஆகிய இரு தனியார் அமைப்புகளும் டிசம்பர் 27ம் திகதி அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளது. அதில் மூன்று இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
பனியில் இளைஞர் ஒருவர் தத்தளிக்கும் காணொளியைக் காட்டிய போதிலும், பல்கேரிய எல்லைப் பொலிசார் அந்த அமைப்புகளின் மீட்பு முயற்சிகளைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்த மூவரையும் எல்லைப் பொலிசார் கண்டுபிடித்தும், கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இளைஞர்களில் ஒருவரின் உடல் பகுதியளவு விலங்குகளால் தின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்கேரிய உள்விவகார அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. அவசர உதவி அழைப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களை உரிய நேரத்தில் மீட்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |