தீர்த்தம் எடுக்க சென்று நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்! ஆடிப்பெருக்கில் நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம் ஈரோட்டில் மூன்று சிறுவர்கள் தீர்த்தம் எடுக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீர்த்தம் எடுக்க சென்ற சிறுவர்கள்
ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூசைகள் நடைபெற்றன. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தளம் புதூர் மதுரை கோவிலில் பூசைகள் நடைபெற்றன.
அங்கு வழிபாட்டிற்கு சென்ற ஜெகதீஷ்(18), சுப்புராஜ்(17), சவுத்ரி(14) ஆகிய மூன்று சிறுவர்கள் தீர்த்தம் எடுப்பதற்காக காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றபோது எதிர்பாராத விதமாக மூவரும் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Dailythanthi
சிறுவர்கள் மரணம்
இதில் துரதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிலையில், மற்றொரு சிறுவனை தேடும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், சிறுவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dailythanthi
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |