சீன உணவகத்தில் சிறுநீர் கழித்த சிறுவர்கள்: 4000 பேருக்கு 10 மடங்கு இழப்பீடு அறிவிப்பு!
2 சிறுவர்கள் உணவில் சிறுநீர் கழித்த வீடியோ வைரலானதை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம் 4000 வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளது.
உணவில் சிறுநீர் கழித்த சிறுவர்கள்
சீனாவின் பிரபல ஹாட் பாட் உணவகமான ஹைடிலாவில் 17 வயது சிறுவர்கள் இருவர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், சிறுவர்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடும் சூடான குழம்பில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட அறையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு சிறுவன் மேஜையின் மீது ஏறி நின்று, அனைவரும் சேர்ந்து உண்ணும் குழம்பில் சிறுநீர் கழித்ததுடன், மற்றொரு சிறுவன் அதை வீடியோவாக பதிவு செய்தது பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
இந்த சம்பவம் பிப்ரவரி மாத இறுதியில் நடந்திருந்தாலும், சமீபத்தில் வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\
மன்னிப்பு கோரிய ஹோட்டல் நிர்வாகம்
இந்த சம்பத்திற்கு பதிலளித்த ஹைடிலாவ் உணவகம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அத்துடன் பிப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை அந்த உணவகத்தில் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கியுள்ளது.
4000 வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு
சுமார் 4,000 வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகையை விட 10 மடங்கு அதிகமாக பணமாக வழங்கப்பட்டது.
"இந்த சம்பவத்தால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்பதை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். ஆனாலும், நாங்கள் எங்களால் முடிந்தவரை பொறுப்பேற்கிறோம்," என்று ஹோட்டல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் கைது
சிறுவர்களின் மோசமான நடத்தையை குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகம் சிச்சுவான் மாகாணத்தின் ஜியான்யாங் நகரின் காவல்துறையிடம் புகார் அளித்தை தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |