கருப்பு நிற சவப்பெட்டியில் டிரம்ப்: ஈரானின் பிரம்மாண்ட விளம்பர பலகை: அதிகரிக்கும் பதற்றம்
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகை
ஈரான் அமெரிக்கா இடையே மோதலானது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள என்கேலாப் சதுக்கத்தில்(Enghelab Square) வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருப்பு நிற சவப்பெட்டியில் கிடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருப்பு நிற சவப்பெட்டியின் மீது அச்சுறுத்தும் விதமாக பாரசீகம் மற்றும் ஆங்கில மொழியில் “டிரம்பை நாங்கள் கொல்வோம்” (we will kill trump) என எழுதப்பட்டுள்ளது.
மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கில் பயன்படுத்தப்பட்ட நினைவேந்தல் பலகையை போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், காமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் பள்ளி கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் குறித்தும் அஞ்சலி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
மேற்கத்திய நாடுகளை ஈரான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போதைய விளம்பரம் மிகவும் ஆக்ரோஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |