பெவிகுயிக் போட்டு வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்: சீல் வைத்த அதிகாரிகள்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கீழே விழுந்து வெட்டுக் காயம் அடைந்த சிறுவனுக்கு பெவிகுயிக் போட்டு சிகிச்சை பார்த்த மருத்துவரின் கிளினிக்-கை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து அடைத்துள்ளனர்.
பெவிகுயிக் போட்டு வைத்தியம் பார்த்த மருத்துவர்
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தின் அலம்பூர் நகரை சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், கால் தவறி கீழே விழுந்ததில் தலையின் நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது தந்தை வம்சி கிருஷ்ணா அருகிலுள்ள ரெயின்போ மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
A private hospital used ‘FeviKwik’ to seal wound rather than stitching of a boy’s head injury |@Voiceupmedia #news #Telangana @KTRBRS @TelanganaCMO pic.twitter.com/WxWhcXXt28
— Voiceup Media (@VoiceUpMedia1) May 6, 2023
ஆனால் சிறுவனின் வெட்டுக் காயத்திற்கு அங்குள்ள மருத்துவர் தையல் போட்டு சிகிச்சை செய்யாமல், பட்டதும் ஓட்டக்கூடிய பெவிகுயிக்-கை சிறுவனின் நெற்றியில் உள்ள வெட்டு காயத்தில் ஒட்டி அனுப்பி வைத்துள்ளார்.
தந்தையின் சந்தேகம்
தையல் எதுவும் போடப்படாமல் மகனின் காயம் ஒட்டப்பட்டு இருப்பதால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, மகனை மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், காயம் பெவிகுயிக் கொண்டு ஒட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர், அத்துடன் அதை அறுவை சிகிச்சை செய்து மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், மகனை மீண்டும் பழைய போலி மருத்துவரிடம் அழைத்து சென்ற சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, மருத்துவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு வம்சி கிருஷ்ணா புகார் அளித்ததன் அடிப்படையில் போலி மருத்துவரின் ரெயின்போ மருத்துவமனை சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது.