பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறிய டெலிகிராம் CEO: அனுமதி வழங்கிய நீதிமன்றம்
டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பாவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ்
சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போனதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், துரோவ் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.
டெலிகிராம் மூலம் சட்டவிரோத செயல்கள் நடப்பது, குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்துப் பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்ஸ் அரசு அவரைக் கைது செய்தது.
பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
பிரான்சை விட்டு வெளியேறும் பாவெல் துரோவ்
தற்போது அவர் பிரான்சை விட்டு வெளியேறிவிட்டதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
மார்ச் 15ஆம் திகதி அதிகாரிகளின் அனுமதியுடன் பிரான்ஸிலிருந்து துபாய் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்கு பிரான்சை விட்டு வெளியேறலாம் என துரோவ் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
அரசுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த டெலிகிராமில் சில மாற்றங்களை துரோவ் மேற்கொண்டார். இதன் விளைவாக, தற்போது அவர் பிரான்சை விட்டு வெளியேற அனுமதி கிடைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |