தோல்வியே சந்திக்காத கேப்டன்! ஸ்டோக்ஸின் சாதனை முறியடிப்பு..தொடரும் வெற்றிகள்
இந்திய அணிக்கு எதிராக இமாலய வெற்றி பெற்றதன் மூலம் பென் ஸ்டோக்ஸின் சாதனையை டெம்பா பவுமா முறியடித்தார்.
டெம்பா பவுமா
கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவராக, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியே சந்திக்காத டெம்பா பவுமாவின் (Temba Bavuma) சாதனை தொடர்கிறது.
ஒயிட்வாஷ்
மேலும், அணித்தலைவராக பதவியேற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றி பெற்று பென் ஸ்டோக்ஸின் (Ben Stokes) சாதனையை பவுமா முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ் அணி 10 வெற்றிகளை பெற்றிருந்தது. 
அத்துடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா.
இந்திய மண்ணில் இந்திய அணி அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இதற்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதே பெரிதாக இருந்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |