ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து : கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பலி
ஜம்மு காஷ்மீரில் மத வழிப்பாட்டு தலத்திற்கு சென்ற பக்தர்கள், பயணித்த பேருந்து கழிந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்ணவி தேவி என்ற பிரபலமான கோயில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு பீகாரிலிருந்து 60க்கும் மேற்பட்ட பக்தர்கள், பேருந்தில் பயணித்துள்ளனர்.
@afp
இந்நிலையில் ஜம்முவின் ஹஜர் கொட் பகுதியிலிருந்த பாலத்தில் பேருந்து மோதியதில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து சுக்கு நூறாக உடைந்து கிடக்கும் நிலையில், அதில் பயணித்த 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பக்தர்கள் பலி
இந்நிலையில் பேருந்தில் அதிகமான ஆட்கள் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@afp
இந்துக்களால் மிகவும் மதிக்கப்படும் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில், வருடா வருடம் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்திரிகள், இங்கு வருகை புரிகின்றனர்.
இதனிடையே வழிப்பாட்டு தலத்திற்கு கடவுளை தரிசிக்க சென்ற பக்தர்கள், கோர விபத்தில் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
@afp
உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் இந்தியாவும் ஒன்றாகும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் காயமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.