இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதல் - 3 பாலஸ்தீனியர்கள் பலி - அதிர்ச்சி வீடியோ
இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதல்
கிட்டத்தட்ட 20ம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்று வரைக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக போர் நடந்து வருகிறது.
இரு நாட்டுகளும் முட்டிக்கொள்ளும் பழக்கம் வழக்கமாக மாறிவிட்டது. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனின் தெருக்களில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்கள் கலீத் அசாசா (21), கஸ்ஸாம் அபு சரியா (29), மற்றும் அகமது சக்ர் (15) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பதிலடி
இந்த ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேற்குக்கரை பகுதியில், கிட்டத்தட்ட 120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காணரமாக, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்தவிதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும், இச்சம்பவத்தில் பல இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2002க்குப் பிறகு முதன்முறையாக, ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் முகாம் இஸ்ரேலிய ஆட்சியின் ஹெலிகாப்டர்களின் தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Watch: Israeli occupation forces shoot directly at civilians staying peacefully inside Ibn Sina Hospital during the continuing Israeli military attack on Jenin, north of the occupied West Bank.
— Quds News Network (@QudsNen) June 19, 2023
Via: Filistin Post pic.twitter.com/wB8FDcbN1c
3 Palestinians killed in Jenin attack by Israeli Apache helicopters.
— Sprinter (@Sprinter99880) June 19, 2023
For the first time since 2002, the Jenin camp on the West Bank of the Jordan River witnessed an attack by helicopters of the Israeli regime, which were carrying out a rescue operation for the Israeli military.… pic.twitter.com/KRckkcxlzz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |