காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் உயிரிழந்த பெண்! முதன் முறையாக வெளியான புகைப்படம்
காபூல் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதில் பெண் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருக்கும் காபூல் விமானநிலையத்தில் நேற்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், இதுவரை 95-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் பெண் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் பெயர் Najma Saddique எனவும், இவருடன் சேர்ந்து இவருடைய சகோதர் மற்றும் உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில், Najma Saddique-வின் புகைப்படம் வெளியாகியுள்ளது.