இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 1000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியே எரிமலை போல் காட்சியளித்துள்ளது.
மேற்கு ஜாவாவில் உள்ள Balongan பகுதியில் அரசாங்க நிறுவனமான Pertamina நடத்திவரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட தீப்பிழம்பு வானுயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குறைந்தது 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000 உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்தின்போது பலமுறை பயங்கரமாக வெடித்துள்ளது. அப்போது, ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உள்ளூர் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
சுமார் 15 பேர் லேசான காயமடைந்தனர், மேலும் மூன்று பேர் இருக்கும் இடத்தை மீட்புக் குழு பரிசோதித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மின்னல் தாக்கப்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இது தலைநகர் Jakarta-விலிருந்து கிழக்கே 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவில் உள்ளது.


