வடகொரியாவில் ஆபாச படம் பார்த்த மாணவனுக்கு கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனை! குடும்பத்தினரும்-ஆசிரியரும் பரிதாப நிலையில்
வடகொரியாவில் கட்டுப்பாடுகளை மீறி பள்ளி மாணவன் ஒருவன் ஆபாச படம் பார்த்ததால், அவருக்கு அந்நாட்டு அரசு கடுமையான தண்டனை கொடுத்துள்ளது.
உலகில் மர்மம் நிறைந்த நாடுகளில் வடகொரியாவும் ஒன்று, இங்கு என்ன நடந்தாலும், வெளிஉலகிற்கு அவ்வளவு எளிதாக தெரிந்துவிடாது.
அங்கிருக்கும் ஊடகங்களுக்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படி அவர்கள் அந்த கட்டுப்பாடுகளை மீறினால், கொடுக்கப்படும் தண்டனை வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும்.
இந்நிலையில், வடகொரியா முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் ஆபாசத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
வடகொரியாவில் ஆபாச படம் தயாரிப்பது மற்றும் விற்பது மற்றும் பார்ப்போருககு மரணதண்டனை வரை விதிக்கப்படும். ஆபாச படம் சமூத சீரழிவை ஏற்படுத்தும் என்று அதிபர் கிம் ஜாங் உன் நினைப்பதால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இது போன்ற நிலையில், வடகொரியாவில் ஆபாச படத்தை பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் பார்த்துள்ளார். இதற்காக அவனுக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆபாச படம் பார்த்த சிறுவனின் ஐபி முகவரியைவைத்து சிறுவனின் இடத்தை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அதன் பின், ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவன் மற்றும் அவரது குடும்பம் நாடு கடத்தப்பட்டுள்ளது.
வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளார்கள். சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்ற போதிலும் சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வட கொரியா நாட்டு சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அந்த பள்ளி ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது என்பதால், பள்ளி தலைமை ஆசிரியர்க்கு கூலி வேலை செய்யும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
