பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராகும் விளாடிமிர் புடின்... வெளியான பகீர் தகவல்
உக்ரைனில் Chernobyl அணுமின் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதலை ஏற்படுத்தி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்க புடின் தயாராகி வருவதாக உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் படையெடுப்புக்கு பெரும்பாலான உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் படையெடுப்பானது தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்தி, உலக நாடுகளை அச்சுறுத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் அணுமின் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்து, அதன் பழியை உக்ரைன் மீது போட்டுவிட ரஷ்யா திட்டமிடுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், செர்னோபில் அணுமின் நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார் என உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய முற்றுகைக்கு பின்னர் செர்னோபில் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்ய துருப்புகள் வசம் சென்றுள்ள நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகள் செர்னோபில் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாடுகளை கைப்பற்றிய பின்னர், புதன்கிழமை மின் இணைப்புகள் மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீசல் ஜெனரேட்டர்களும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருளைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஆபத்தான வைரஸ் தாக்குதலுக்கும் ரஷ்யா தயாராகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, உக்ரேனிய விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.