இராணுவ முகாமில் பயங்கர குண்டுவெடிப்பு; 20 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான Equatorial Guineaவில் இராணுவ முகாம் மற்றும் அருகிலுள்ள கிராம பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 குண்டுகள் வெடித்தது.
இதில், குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈக்குவடோரியல் கினியாவின் பொருளாதார தலைநகரமான Bata-வில் உள்ள Nkoa Ntoma முகாமில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
அப்பகுதியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிந்தது தரைமட்டமாகின.
இராணுவ தளத்தில் மோசமான நிலையில் வெடிமருந்து பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் அருகில் உள்ள கிராமப்புற விளைநிலத்தில் விவசாயிகள் வெடிமருந்துகளை எரித்த பொது இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி Obiang Nguema தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.