பதுங்கியிருந்து 13 பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்! மெக்ஸிகோவில் பரபரப்பு சம்பவம்
மெக்ஸிகோ சிட்டிக்கு வெளியே சிறிது தூரத்தில் பதுங்கியிருந்து துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், 13 மெக்சிகன் பொலிஸாரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் நடந்த இந்த சம்பவம் மெக்ஸிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொடூரமான சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Llano Grande பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது பட்டப்பகலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொல்லப்பட்ட அதிகாரிகளில் 8 பேர் மாநில காவல்துறையினர், மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள்.
இந்த தாக்குதல் மெக்சிகன் அரசுக்கு அவமரியாதை என்றும் இதற்கு சட்டத்தின் ஆதரவுடன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி தக்க பதிலளிக்கவுள்ளதாக என்று நாட்டின் பாதுகாப்பது அமைச்சர் Rodrigo Martinez-Celis கூறியுள்ளார்.
மெக்ஸிகோவின் தேசிய காவல்படை, இராணுவமயமாக்கப்பட்ட பொலிஸும், ஆயுதப்படைகளும் குற்றவாளிகளை நிலம் மற்றும் வான்வழியிலும் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எத்தனை குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்அல்லது காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, அல்லது நாட்டின் முக்கிய போதைப்பொருள் விற்பனையாளர்களில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

